மோடி -ஜின்பிங் சந்திப்பை உளவு பார்க்க வந்த அமெரிக்கர்கள் கைது!

அமெரிக்க உளவு நிறுவனத்தால் இயக்கப்படும் ரேடியோ ஃப்ரி ஏசியா என்ற செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த இருவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அமெரிக்க உளவு நிறுவனத்தால் இயக்கப்பட்டுவரும் ரேடியோ ஃப்ரி ஏசியா என்ற செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த கியால்ட்சன் சோயடக் மற்றும் வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா என்ற நிறுவனத்தைச் சேர்ந்த பீமா நகோடப்பை சென்னை சென்ட்ரல் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். இவர் இருவரும் திபெத் நாட்டை சேர்ந்தவர்கள் என்றும் தற்போது அமெரிக்காவில் பணியாற்றுகின்றனர் என்பதும் குறிப்பிடதக்கது.

இன்று காலை சீன அதிபர் ஜி ஜின்பிங் தங்கியுள்ள ஐடிசி சோழா நட்சத்திர விடுதியின் முன் திபெத்தியர்கள் ஐந்து பேர் போராட்டம் நடத்திய நிலையில், இவர்களும் உளவு பார்க்கு , மற்றும் அச்சுறுத்தல் என்ற சந்தேகத்தின் பேரில் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

No comments