தஞ்சாவூர் கோழிக்கறியோடு முடிந்தது சந்திப்பு!

மாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜின்பிங்குக்கு பிரதமர் மோடி இரவு உணவு விருந்து அளித்தார். இதில் தஞ்சாவூர் கோழிக்கறி உட்பட அசைவ உணவு வகைகள் பரிமாறப்பட்டன.
பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஷி ஜின்பிங்க்கும் சந்திக்கும் வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சி இன்று மாமல்லபுரத்தில் நடைபெற்றது. அப்போது அவர்கள் பல்லவர் கால சிற்பங்கள், ஐந்து ரதம், கடற்கரைக் கோவில் உள்ளிட்டவற்றை கண்டு ரசித்தனர்.
பின்னர், கடற்கரைக் கோவில் அருகே அமைக்கப்பட்ட அரங்கில் இருவரும் அமர்ந்து கலைநிகழ்ச்சிகளை ரசித்தனர். இதன்பின்பு, சீன அதிபர்   ஜின்பிங்கிற்கு நினைவுப் பரிசுகளாக நாச்சியார் கோவில் அன்னம் விளக்கு, தஞ்சை நடனமாடும் சரஸ்வதி ஓவியத்தை பிரதமர் மோடி வழங்கினார்.
தொடர்ந்து, சீன அதிபர் ஜின்பிங்குக்கு பிரதமர் மோடி இரவு விருந்து அளித்தார். தக்காளி ரசம், மலபார் கூட்டு, கொரி கெம்பு(தயிர், பச்சைமிளகாய் காரத்துடன் சிக்கன் தட்டைகள்) மட்டன் உலர்த்தியாடு(தேங்காய் போட்ட மட்டன் ரோஸ்ட்), கருவேப்பிலை மீன்வருவல், தஞ்சாவூர் கோழிக்கறி, இறைச்சி கெட்டிக்குழம்பு, பீட்ரூட் கொங்குரா சோப், பச்ச சுண்டக்கா அரைச்ச குழம்பு,
அரைத்துவிட்ட சாம்பார், மாம்சம் பிரியாணி,  கவனரிசி அல்வா, முக்கனி ஐஸ்கிரீம் ஆகியவை பரிமாறப்பட்டது. இது தவிர, பிரட், ரொட்டிகளும் பரிமாறப்பட்டது.  

No comments