கோத்தாவின் கீழேயே நீதிமன்றம்?

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் ஆட்சிக்கு வந்தால், நீதித்துறையைக் கையில் எடுக்கப் போவதாக அனுராதபுரத்தில் தெரிவித்ததாக கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
ஐ.தே.கவின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார்.
கோத்தபாய ராஜபக்ஷ தான் ஆட்சிக்கு வந்தால் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இராணுவத்தினர் அனைவரையும் விடுதலை செய்வேன் என்று அவர் குறிப்பிட்டார்.
நீதிமன்றத்தின் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றவாளிகள் என்று தீர்மானிக்கப்பட்டவர்களை விடுதலை செய்வதாகவே அவர் கூறுகின்றார். இதனால், நீதிமன்றம் முழுமையாக அவருடைய ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரப்படும் என்பதையே அவர் இக்கருத்தின் ஊடாக வெளிப்படுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

No comments