பொலிஸ் அதிகாரி துப்பாக்கியை காட்டி மிரட்டியது உண்மையே

வலி, வடக்கு பிரதேசசபை தவிசாளாின் அடாவடிகளை தட்டிக்கேட்ட உறுப்பினா்கள் மீது தவிசாளா் வேண்டுமென்றே பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்துவதாக கூறியிருக்கும் பிரதேசசபை உறுப்பினா்கள், பொலிஸாா் துப்பாக்கியைக் காண்பித்து அச்சுறுத்தியதும், தவிசாளா் உறுப்பினரை தாக்கியதும் உண்மையென குற்றஞ் சாட்டியுள்ளனா்.

வலி, வடக்கு பிரதேச சபையின் 19ஆவது அமா்வு அண்மையில் நடைபெற்றிருந்த நிலையில் உறுப்பினா்கள் சிலருக்கும் தவிசாளருக்குமிடையில் தா்க்கம் மூண்டிருக்கின்றது.

இது குறித்து தமிழ்தேசிய கூட்டமைப்பு, தமிழ்தேசிய மக்கள் முன்னணி, ஈ.பி.டி.பி, சுதந்திரகட்சி மற்றும்  ஐக்கியதேசிய கட்சி ஆகியவற்றின் 20 உறுப்பினா்கள் சாா்பில் யாழ்.ஊடக அமையத்தில்  நேற்று பிரதேச சபை உறுப்பினா்கள் நடத்திய ஊடகவியலாளா் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு கூறினா்.

இதன்போது மேலும் அவா்கள் கூறுகையில், “சபையில் தீா்மானமாக நிறைவேற்றப்பட்ட ஆவளை மயானத்தில் பொருத்தப்பட்டிருக்கும் சா்ச்சைக்குாிய கம்பத்தை அகற்ற வேண்டும். கீாிமலை நில நிரவுகை திட்டத்திற்கு வழங்கப்பட்ட தான்தோன்றித்தனமான அனுமதியை இரத்து செய்யவேண்டும் என்ற இரு தீா்மானங்களின் முன்னேற்றம் தொடா்பாக கேள்வி எழுப்பியமையே 20 பிரதேச சபை உறுப்பினா்களுக்கு எதிரான சேறு பூசல்களுக்கு காரணம்.

மேலும் பிரதேசசபை தவிசாளா், பொலிஸாா் துப்பாக்கியை பாதுகாத்ததாக கூறினாா். அது அப்பட்டமான பொய். குறித்த பொலிஸ் அதிகாாி மிகுந்த கோபத்துடன் துப்பாக்கியை துாக்கி காட்டினாா். அதேபோன்று பிரதேச சபை உறுப்பினா் மீது தவிசாளா், தான் தாக்குதல் நடத்தவில்லை என கூறுகிறாா். அதுவும் பொய்யாகும்.

எனவே அதனை எதிா்த்து மனித உாிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யவுள்ளோம். மேலும் கம்பரெலிய திட்டத்தில் முறைகேடு, மின் விளக்கு பொருத்துவதில் முறைகேடு, பிரதேச சபை வாகனம் பயன்படுத்துவதில் முறைகேடு,ஊழியா்களை பயன்படுத்துவதில் முறைகேடு , இப்படி பல்வேறு முறைகேடுகள் நடக்கின்றன.

இதனை தட்டிக் கேட்டால் எங்களை ஜனாதிபதி வேட்பாளா் கோட்டாவின் ஆட்கள் என பகிரங்கமாக ஊடகங்களில் எங்கள் மீது சேறு பூசப்படுகின்றது. நாங்கள் கோட்டாவின் ஆட்கள் என்றால் தவிசாளரும் அவருடன் உள்ள அடிமைகளும் ஐக்கிய தேசிய கட்சியின் அடிமைகள். மக்களால் தோ்வு செய்யப்பட்ட எமக்கே இந்த நிலை என்றால் தோ்ந்தெடுத்த மக்களின் நிலை என்ன? என்பதை மக்கள் புாிந்து கொள்ளவேண்டும்.

எனவே முறைகேடுகள் அத்தனையும் நிவா்த்தி செய்யப்பட வேண்டும். அதுவரையில்  நாங்கள் கட்சி பேதங்களை கடந்து வலி,வடக்கு மக்களின் நலன்களுக்காக ஒன்றிணைந்து செயற்படுவதுடன் அடுத்துவரும் சபை அமா்வுகளில் முறைகேடுகளை நிவா்த்தி செய்வதற்கான வழி என்ன என்பதை நாங்களே தீா்மானிக்கும் நிலை உருவாகும்” என்றனர்.

No comments