மன்னார் ஆயருடன் கனடா உயர்ஸ்தானிகர் சந்திப்பு

மன்னார் மறை மாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை மற்றும் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டெவோயிட் மெக்கின்னனுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.

குறித்த சந்திப்பு இன்று (புதன்கிழமை) மன்னார் ஆயர் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின் போது மன்னார் மாவட்டத்தின் தற்போதைய நிலமை தொடர்பாகவும் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நாட்டில் இடம் பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலுக்குப் பின் மன்னார் மாவட்டத்தில் சமய, இன ஒற்றுமைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் மன்னார் மாவட்டத்தின் அபிவிருத்தி பணிகள் குறித்தும், மாவட்டத்தில் உள்ள பிரச்சினைகள் குறித்தும் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டெவோயிட் மன்னார் மறைமாவட்ட ஆயரிடம் கேட்டறிந்துகொண்டார்.

மேலும் இந்த சந்திப்பில் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளாரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

No comments