தமிழர்களின் பிரச்சினையை தீர்க்கும் ஒருவருக்கு வாக்களியுங்கள்

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வினை முன்வைக்கக்கூடிய ஒருவருக்கே இம்முறை மக்கள் வாக்களிக்க வேண்டும் என மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்ணான்டோ கேட்டுக்கொண்டார்.
மன்னாரில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் 16ஆம் திகதி நடைபெறவுள்ளதால் ஒவ்வொருவரும் நன்கு சிந்தித்து தமது சிந்தனைகளினூடாக செயற்பட வேண்டும்.
நாங்கள் தமிழ் மக்கள் என்ற வகையில் எமக்கு ஒரு பொறுப்பு உள்ளது. சிங்களவர்கள் எங்கே இருக்கின்றார்கள்? தமிழ் மக்கள் எங்கே இருக்கின்றார்கள்? என்பதை நாங்கள் சரியாக புறிந்துகொண்டு நாம் சரியான முறையில் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.
எமக்கு இருக்கக்கூடிய ஒரு உரிமை வாக்குரிமை. எனவே அந்த உரிமையை நாம் பயன்படுத்த வேண்டும்” என மேலும் தெரிவித்தார்.

No comments