கல்முனையில் தமிழ் பிரதேச செயலகம் அமைப்பது உறுதி - மஹிந்த


ஆட்சிக்கு வந்ததும் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்துவோம் என நாங்கள் உறுதிமொழி வழங்குவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் எதிக்கட்சி தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

அதேவேளை காணிகளுக்கு உரித்தான உரிமம் இல்லாது விவசாயம் மேற்கொண்டுவருகின்ற விவசாயிகளுக்கு காணி உரிமத்தை பெற்றுத்தரவும் நடவடிக்கை எடுக்கப்படும் என மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசாரக் கூட்டம் மட்டக்களப்பு கல்லடியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றிய மஹிந்த ராஜபக்ஷ, “உங்களுக்கு இருக்கின்ற நாளாந்த பிரச்சனைகளுக்காக போரட்டங்கள் நடத்துகிறீர்கள். உங்கள் பொருளாதார பிரச்சனை உள்ளிட்ட அனைத்தையும் நாங்கள் அறிவோம்.

நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் கல்முனை வடக்கு பிரதேச பிரதேச செயலகத்தை தரமுயர்துவதாக நாங்கள் உறுதிமொழி வழங்குகின்றோம்.

அதுமட்டுமல்ல காணிகளுக்கு உரித்தான உரிமம் இல்லாமல் விவசாயம் மேற்கொண்டுவருகின்ற விவசாயிகளுக்கு காணி உரிமத்தை பெற்றுத்தருவோம்

யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே இந்த மாகாணத்தில் அபிவிருத்தியை செய்தோம். கல்லடி பாலம், மண்முனை பாலம் என பல அபிவிருத்திகளை செய்தோம்.

மட்டக்களப்பு மக்கள் இந்த தேசத்தில் தலைநிமிர்ந்து நிம்மதியாக வாழவேண்டும். அதை நாம் செய்வோம்” என அவர் தெரிவித்தார்.

No comments