கஞ்சா கடத்திய பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் கைது!

மன்னாரில் ஜீப் ரக வாகனம் ஒன்றில் 180 கிலோ கிராம் கேரள கஞ்சாவைக் கொண்டுசென்ற இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில்  பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அத்தோடு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments