ஷஹ்ரானுடன் ஹக்கீம் இருந்தாரா? கைது செய்ய கோரி முறைப்பாடு

அமைச்சர் ரவூப் ஹக்கீமை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனக்கோரி சிலர் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

சமூக வலைத் தளங்களில் பகிரப்படும், அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான பயங்கரவாதி சஹ்ரான் ஹஷிமுக்கும் இடையில் இடம்பெற்றதாக கூறப்படும் சந்திப்பு தொடர்பான காணொளி தகவல்களை முன்வைத்து இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாட்டை பதிவு செய்ததன் பின்னர், ஊடகங்களிடம் கருத்து தெரிவித்துள்ள மிப்லான் மௌலவி, முக்கியமானவர்கள் வெளியே உள்ள நிலையில், ஏனையவர்கள் உள்ளே இருக்கின்றனர். இந்த நிலையில், ரவூப் ஹக்கீமை கைதுசெய்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் தெரிவுக்குழுவிலிருந்து ரவூப் ஹக்கீமை நீக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments