யாழில் பெருமளவு கஞ்சாவுடன் மூவர் சிக்கினர்

யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து 221 கிலோ கிராம் நிறையுடைய கேரள கஞ்சாவுடன் 3 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கடற்படையினருக்குக் கிடைத்த  இரகசிய தகவலின் அடிப்படையில் சுற்றிவளைப்பை மேற்கொண்டபோதே குறித்த மூவரும் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments