தேர்தல் சட்டத்தை மீறிய 11 பேர் கைது

ஜனாதிபதி தேர்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் பிரதேச சபை உறுப்பினர்கள் இருவர் மற்றும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இதனிடையே, ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 851 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

No comments