ஜனாதிபதி நடுநிலை வகிப்பது நல்லதே - மஹிந்தர்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நடுநிலை வகிக்கப்போவதாக ஜனாதிபதி எடுத்த முடிவு நல்லதொரு விடயமென பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

மாவத்தகம பிரதேசத்தில் பொதுஜன பெரமுன கட்சியின் காரியாலத்தை திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மஹிந்த மேலும் கூறியுள்ளதாவது,

இந்த நாடு ஒவ்வொரு துறைகளிலும் வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த ஐந்து வருடங்களாக நாடாளுமன்றில் தெரிவிக்கும் எந்தவொரு கருத்தையும் பிரதமர் காதில் வாங்கிக்கொள்கிறார் இல்லை.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நடுநிலை வகிக்கப்போவதாக ஜனாதிபதி எடுத்த முடிவு நல்லது. அதேநேரம், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் உள்ள அனைவரும் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவளிப்பதற்கு முடிவெடுத்துள்ளார்கள்.

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் நல்ல முடிவு கிடைக்கும். அதனைக் கொண்டாட தயாராகுங்கள் என கட்சி ஆதரவாளர்களைக் கேட்டுக்கொள்கின்றேன். இந்த வெற்றி, எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி கோட்டாபய ஜனாதிபதித் தேர்தலில் வெல்வதற்கான ஆரம்பமாகும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments