கீழடியில் சர்வதேச தரத்தில் அருங்காட்சியகம், பார்வையிட்டபின் வைகோ வேண்டுகோள்,

கடந்த மாதம் கீழடியில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பல தொன்மையான பொருட்கள் கண்டறியப்பட்டன. மொத்தமாக 16,000 பொருட்கள் கீழடி ஆராய்ச்சியின் மூலம் கிடைக்கப் பெற்றுள்ளன. அதனால், அகழ்வாராய்ச்சி இன்னும் தொடர்ந்த வண்ணம் உள்ளது. இறுதிக் கட்டத்தை நெருங்கிய கீழடி அகழ்வாராய்ச்சியை இன்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேரில் சென்று பார்வையிட்டார்.

 அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ, கீழடி அகழ்வாராய்ச்சியின் மூலம் அக்காலத்து மக்கள் எழுத்தறிவுடன் இருந்தது தெரிய வந்துள்ளது. நெசவுத் தொழில் மற்றும் உருக்கு தொழிலும் நடைபெற்றுள்ளது. உத்திர பிரதேசம் சலோனியில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் கல்லறைகள் மட்டுமே கிடைத்தது. அப்பகுதியின் தொன்மை குறித்த தகவல்கள் வெளிவரும் முன்னரே மத்திய அரசு அந்த பகுதியைப் பாதுகாக்கப் பட்ட பகுதியாக அறிவித்தது. ஆனால், கீழடி தொன்மையான பகுதி என்று அறிவிப்புகள் வந்த பிறகும், கீழடியைப் பாதுகாக்கப் பட்ட பகுதி என்று அறிவிப்பதற்குத் தாமதம் காட்டுவது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், கீழடியைச் சுற்றியுள்ள பகுதியிலும் அகழ்வாராய்ச்சி நடத்த வேண்டும் என்றும் கீழடியில் சர்வதேச தரத்தில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

No comments