வீதிப் பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபவனி

வட மாகாண ஆளுநரின் வழிநடத்தலில் ஆரம்பமான வீதிப்பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு நடை பவனி இடம்பெற்றது. குறித்த விழிப்புணர்வு நடைபவனி மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் இன்று (11) காலை இடம்பெற்றது.

மாந்தை மேற்கு பிரதேச செயலக உதவி பிரதேசச் செயலாளர் எஸ்.ஜெசிந்தன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் ஆரம்பமான குறித்த நடைபவனி, மன்னார் பஸார் பகுதியூடாக சென்று மீண்டும் மன்னார் மாவட்டச் செயலகத்தை வந்தடைந்தது.

குறித்த நடைபவனியில், மன்னார் மாவட்ட செயலக அதிகாரிகள் பணியாளர்கள் உட்பட திணைக்கள பணியாளர்களும் கலந்து கொண்டனர். இதனைதொடர்ந்து மாவட்டச் செயலகத்தில் வீதிபாதுகாப்பு உறுதி மொழியையும் அதிகாரிகள் வழங்கினர்.

வடமாகாணத்தில் அதிகரித்து வரும் வீதி விபத்துக்களை கட்டுப்படுத்தும் நோக்கில் வடக்கு முழுவதும் பல்வேறு மட்டங்களில் விழிப்புணர்வு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த 7ஆம் திகதி ஆரம்பமான வடமாகாண வீதிபாதுகாப்பு வாரமானது எதிர் வரும் 13ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments