எல்பிட்டிய தேர்தல் நிறைவு; 75% வாக்குப் பதிவு!

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான வாக்கு பதிவு இன்று காலை 7.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை இடம்பெற்றது.

இதன்படி இன்று மதியம் 1 மணி வரையில் 50 சதவீதமான வாக்களிப்பு இடம்பெற்றது. அதன்பின்னர் எஞ்சி மூன்று மணி நேரத்தில் 25 சதவீததமான வாக்குகள் பதிவாகின.

வாக்களிப்பு நிறைவில் மொத்தம் 75 சதவீதமான வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இப்பொழுது வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

No comments