கோத்தாவே இரட்சகன்:அரசு விசுவாசம்?


கோத்தபாய ராஜபக்சவினால் தான் இப்போது தேர்தல்கள் சுமூகமாக நடைபெறுகின்றன. அவருக்கு நாம் நன்றியுடயவராக இருக்க வேண்டும். நன்றி மறவாமை இலங்கையர்களின் இரத்தத்தில் இல்லை இல்லையென சனாதிபதி சட்டத்தரணி ரோமேஸ் டி சில்வா நேற்று வாதம் புரிந்துள்ளனர்.

கோத்தபாயவின் இரட்டை குடியுரிமை சான்றிதழ் செல்லாது ஆகையால் அவர் சனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது எனத் தொடரப்பட்ட வழக்கிலேயே இரசு தரப்பு கோத்தாவிற்கான தமது விசுவாசத்தை காண்பித்துள்ளது. 

இதனிடையே ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஸவுடன் சுதந்திரக் கட்சி நேற்றிரவு நடாத்திய பேச்சுவார்த்தையும் உடன்பாடுகள் இன்றி நிறைவடைந்துள்ளதாக சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

சின்னம் தொடர்பான விடயத்தில் உடன்பாடு எட்டப்படவில்லையெனவும், ஏனைய விடயங்களில் சில உடன்பாடுகள் காணப்பட்டதாகவும் தயாசிறி எம்.பி. கூறியுள்ளார்.

நேற்றிரவு நடைபெற்ற கலந்துரையாடலில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த அமரவீர, சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, பாராளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவண்ண ஆகியோர்  கலந்துகொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

No comments