புலனாய்வு பிரிவிற்கு மீண்டும் முன்னுரிமை:கோத்தா


நாட்டின் தேசிய பாது­காப்பை கட்­டி­யெ­ழுப்ப இரா­ணு­வத்­திற்கும் புல­னாய்­வுத்­து­றைக்கும் உரிய அதி­கா­ரங்­களை வழங்­கு­வ­துடன் இந்த நாட்­டினை கட்­டுப்­பா­டான நாடாக கட்­டி­யெ­ழுப்பும் வகையில் அதனை பொறுப்­பேற்க தயா­ரா­க­வுள்ளேன் என்று  ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் கோத்­தாபய ராஜபக்ஷ  தெரி­வித்தார். நாம் கொடுத்த வாக்­கு­று­தி­களை சரி­யாக நிறை­வேற்­றுவோம் எனவும் அவர் குறிப்­பிட்டார்.
ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணி யின் ஜனா­தி­பதி தேர்தல்  பிர­சார கூட்­டத்தில் அவர் உரை­யாற்­றும்­போது மேலும் கூறி­ய­தா­வது.
கடந்த முப்­பது ஆண்­டு­க­ளாக இந்த நாட்டில் பயங்­க­ர­வாதம்  நீடித்­தது. பல்­வேறு அர­சாங்­கங்­களின் கீழ் பயங்­க­ர­வா­தத்தை இல்­லா­தொ­ழிக்க முடி­யாத நிலைமை இருந்­தது. அவ்­வாறு இருக்­கையில் மஹிந்த ராஜபக்ஷவின் தலை­மையில் அமைக்­கப்­பட்ட அர­சாங்­கத்தில் பயங்­க­ர­வா­தத்தை ஒழிக்கும் நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டது.
அவர் தனது ஆட்­சிக்­கா­லத்தில் பயங்­க­ர­வா­தத்தை முழு­மை­யாக ஒழித்­துக்­கட்­டினார். அது­மட்டும் அல்ல யுத்­தத்தின் பின்னர் இந்த நாட்டில் பல்­வேறு முத­லீ­டுகள் குவிந்­தது. இலங்கை ஆசி­யாவின் சிறந்த நாடாக மாற்­றப்­பட்­டது. நாம் கொடுத்த வாக்­கு­று­தி­களை சரி­யாக நிறை­வேற்­றினோம்.
ஆனால் கடந்த காலத்தில் ஆட்­சிக்கு வந்­த­வர்கள் பல்­வேறு வாக்­கு­று­தி­களை கொடுத்­தனர். ஆனால் அவற்றில் ஒன்­றைக்­கூட அவர்­களால் நிறை­வேற்ற முடி­ய­வில்லை. பயங்­க­ர­வா­தத்தை ஒழித்து உய­ரிய அபி­வி­ருத்தி கொண்ட வளர்­சி­ய­டைத்து வரும் நாடாக கொடுக்­கப்­பட்ட நாடு இறுதி மூன்று நான்கு ஆண்­டு­களில் மீண்டும் பழைய நிலை­மைக்கு தள்­ளப்­பட்­டுள்­ளது.
எனினும் நாம் மீண்டும் இந்த நாட்­டினை பொறுப்­பேற்க தயா­ராக உள்ளோம். இந்த நாட்­டினை  பாது­காப்­பான நாடாக மட்­டு­மல்ல ஒழுக்­க­மான சட்டம், ஒழுங்கை சரி­யாக கடைப்­பி­டிக்கும் நாடாவும் மாற்ற வேண்டும்.
அதற்­காக நாம் அனை­வரும் ஒன்­றி­ணைய வேண்டும். இந்த நாட்டில் இரா­ணு­வத்­திற்கு உரிய அதி­கா­ரங்­களை கொடுத்து, புல­னாய்வு துறைக்­கான சரி­யான அதி­கா­ரங்­களை கொடுத்து இந்த நாட்­டினை பாது­காப்­பான நாடாக மாற்ற வேண்டும்.
இரா­ணு­வத்­திற்கும் தேசிய பாது­காப்­புக்கும் முத­லிடம் கொடுக்க வேண்டும். அதை விடுத்­தது புதிய லிபரல் கொள்கை கொண்­ட­வர்­களின் மூல­மாக இந்த நாட்­டினை கட்­டி­யெ­ழுப்ப முடி­யாது. இந்த நாட்டின் தேசிய பாது­காப்பை கட்­டி­யெ­ழுப்ப வேண்டும் என்றால் அதில் இரா­ணு­வத்­திற்­கான பங்கு அதி­க­மாக இருக்க வேண்டும். எம்மால் மட்­டுமே இந்த நாட்­டினை கட்­டி­யெ­ழுப்­பவும் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்­தவும் முடியும் என்­பதை கூறிக்­கொள்ள விரும்­பு­கின்றேன்.
அதேபோல் இந்த நாட்டின் விவ­சா­யத்­திற்கு அதிக முக்­கி­யத்­துவம் கொடுத்து  நாட்டின் விவ­சா­யத்தை கட்­டி­யெ­ழுப்­பு­வ­துடன் உள்­நாட்டு உற்­பத்­தியை அதி­க­ரித்து அதன் மூல­மாக எமது ஏற்­று­ம­தியை நாம் அதி­க­ரிப்போம். அத்­துடன் கல்­வித்­து­றையில் பாரிய புரட்சியை நாம் செய்வோம். தகுதியான சகல மாணவர்களுக்கும் தகவல் தொழிநுட்ப அறிவுசார் கற்கையை உருவாக்குவதுடன் எமது இளம் சமூகத்தை இடை நடுவே கைவிடாது இறுதிவரை சரியான எதிர்காலத்திற்கு கொண்டுசெல்ல நாம் நடவடிக்கை எடுப்போம். இதன் மூலமாக எமது பொருளாதார கொள்கையை நாம் பலப்படுத்துவோம் என்றார்.

No comments