புறப்பட்டது வெள்ளை வான்:அடித்துக்கொலை?


நெல்லியடி பொலிஸாரால் விசாரணைக்கென தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரொருவர் உயிரிழந்துள்ளார்.அவர் தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறை வாதிட்டுவருகின்ற போதும் உயிரிழந்தவரது உடல் எங்கும் அடிகாயங்கள் இருப்பதாக சொல்லப்படுகின்றது.

இதேவேளை குடும்ப பிரச்சினையொன்று தொடர்பில் கைதான குறித்த நபரை வெள்ளை வான் ஒன்றிலேயே காவல்துறை நேற்றிரவு பிடித்து சென்றதாக தெரியவருகின்றது.

எனினும் பிடித்து சென்று அரை மணி நேரத்தின் பின்னராக மந்திகை வைத்தியசாலையில் சந்தேக நபர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அனுமதிக்கப்பட்டு அரை மணிநேரத்தில் அவர் உயிரிழந்துள்ளமை சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.

இதனிடையே பருத்தித்துறை நீதிமன்றில் சந்தேக நபர் தற்கொலை செய்து கொண்டதாலேயே உயிரிழந்ததாக நெல்லியடி காவல்துறை அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

No comments