ஹெரோயின் மற்றும் ஆயுதங்களுடன் நால்வர் கைது!

தெஹிவளை - கட்டுப்பெத்தையில் தெஹிவளை மிருகக்காட்சிச் சாலை ஊழியர் உட்பட ஹெரோயின் போதைப் பொருளுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து 683 கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது மிருகக்காட்சி சாலை ஊழியர் நாலக புஷ்பகுமார (41) 100 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டதுடன், அவரது மிருகக்காட்சிச் சாலை அலுமாரியில் இருந்து 400 கிராம் ஹெரோயினும் மீட்கப்பட்டது.

மேலும் விசாரணையில் பிறிதொரு இடத்தில் சொகுசு வாகனம் ஒன்றுடன், இருவர் கைதாகினர். அவர்களிடம் இருந்து
துப்பாக்கி ஒன்று, மெகசின் ஒன்று மற்றும் 9எம்எம் தோட்டாக்கள் 5, இருபது இலட்சம் பணம் என்பன கைப்பற்றப்பட்டது.

வெலிகட சிறைச்சாலையில் உள்ள சந்தேக நபர் ஒருவரினால் இவ்வாறு ஹெரோயின் வர்த்தகம் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

No comments