மாகாண விவசாய பணிப்பாளர் அலுவலகம் திறப்பு

வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவனால் வவுனியாவில் பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.

வடக்கு மாகாண சபையின் குறித்தொதுக்கப்பட்ட நிதியின் கீழ் 33 இலட்சம் ரூபாய் செலவில் இந்த அலுவலகம் அமைக்கப்பட்ட நிலையில் இன்று (06) திறந்துவைக்கப்பட்டது.

மாகாண பிரதி விவசாயப் பணிப்பாளர் சகிலா பானுவின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முன்னாள் வடக்கு மாகாண விவசாய அமைச்சர் சிவனேசன், வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம்.ஹனீபா, ஆளுநரின் பிரத்தியேக செயலாளர் சி.சத்தியசீலன், மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதேவேளை கமக்கார அமைப்புக்களின் சம்மேளமும் இதன்போது திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments