அதிக வாக்குகளில் சஜித்தை மலையக மக்கள் வெற்றி பெற செய்வார்கள்

மலையக தமிழர்கள் நன்றியுடையவர்கள் என்பதால் அதிக படியான வாக்குகளில் சஜித் பிரேமதாசாவை வெற்றிபெறச் செய்வார்கள் என அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

‘சஜித்துடன் நாட்டை வெற்றிக்கொள்ளும் போராட்டம்’ எனும் தொனிப்பொருளில் சஜித் பிரேமதாசவை ஆதரித்து இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் கூறுகையில், “நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏழு பேர் இருந்தோம். அப்போது 1948 ஆண்டு எமது குடியுரிமை பறிக்கப்பட்டது. கிட்டதட்ட 1988 ஆண்டுக்கு பின்னர் தான் எங்களுக்கு குடியுரிமை மீண்டும் வழங்கப்பட்டு வாக்குரிமை வழங்கப்பட்டது.

அந்த வாக்குரிமையை தந்தவர்கள் சஜித் பிரேமதாசவின் தந்தையார் ரணசிங்க பிரேமதாச தான்.

மக்கள் நாங்கள் சொன்னது போல் கடந்த காலங்களில் வாக்களித்ததன் காரணமாக ஏழு பேச்சர்ஸ் காணியில் சொந்த வீடு கட்டிக் கொடுத்தோம். பிரதேச சபைகளை அதிகரித்தோம். மலையக அபிவிருத்தி அதிகார சபை உருவாக்கினோம். இன்னும் பல திட்டங்களை உருவாக்கினோம்.

இன்று வாக்குரிமையை பெற்றுக்கொடுத்த அரவது மகன் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறார். அவரை நாம் நுவரெலியா மாவட்டத்தில் அதிககடியான வாக்குகளில் வெற்றிபெறச் செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.

No comments