வேலை நிறுத்தம் செய்ய வேண்டாம்- கோரிக்கை விடுத்த மஹிந்த

ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரச பணியாளர்கள் யாரும் பணிப்புறக்கணிப்பு செய்ய வேண்டாம் என தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

போராட்டத்தில் ஈடுபடும் தொழிற்சங்கங்களுக்கு தேர்தர்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவினால் இந்த முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை இலகுபடுத்தும் நோக்கில் போராட்டத்தில் ஈடுபடும் தொழிற்சங்கங்கள் போராட்டங்களை பிற்போட வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜனதிபதித் தேர்தல் வரும் நவம்பர் 16ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், தேர்தல் பணிகளை தேர்தர்கள் ஆணைக்குழு மும்முரமாக செயற்படுத்தி வருகிறது.

No comments