கோத்தாவுக்கான 101 பிரச்சார நிலையங்கள்!

மட்டக்களப்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபயவுக்கு ஆதரவு தெரிவித்து, 101 தேர்தல் பிரசார நிலையங்கள் திறக்கப்படவுள்ளன.

இதில் முதலாவது தேர்தல் பிரசார நிலையம் மட்டக்களப்பு- கல்லடி, உப்போடை பகுதியில் நேற்று (14) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் தலைமையில் மட்டக்களப்பு, வாவிக்கரை தலைமைச் செயலகத்தில் குறித்த பிரதான நிகழ்வுகள் இடம்பெற்றன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்ஷவை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றியடையச் செய்வதற்கும், தேர்தல் பிரசாரத்தை முன்னெடுப்பதற்கும், மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் 101 தேர்தல் பிரசார நிலையங்கள் திறந்து வைக்கப்படவுள்ளன.

No comments