நீதிமன்றை ஏமாற்றிய கோத்தா நாளை யாழில்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி பிரசார கூட்டம் நாளை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.

இந்த தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொள்வதற்காக பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளனர்.

யாழ்ப்பாணம் றக்கா வீதியில் உள்ள நரிக்குன்று மைதானத்தில் நாளை மதியம் 2 மணிக்கு குறித்த தேர்தல் பிரசாரக் கூட்டம் இடம்பெறவுள்ளது.

இந்த தேர்தல் பிரசார கூட்டத்திற்கு மக்களை திரட்டும் பணியில் பொதுஜன பெரமுனவுக்கு வடக்கில் ஆதரவு கொடுத்துள்ள கட்சிகள் களமிறங்கியுள்ளன.

மேலும் தென்னிலங்கையில் இருந்து வடக்கிற்கு அழைத்து வரப்பட்டுள்ள இளைஞர்கள் வாடகை வீடுகளில் தங்கவைக்கப்பட்டு தேர்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதுமட்டுமல்லாது முன்னாள் இராணுவ அதிகாரிகளும் வடக்கில் வாடகை வீடுகளில் தங்கி பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதேவேளை நாளை வவுனியாவில் நடக்கும் கூட்டத்திலும் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

மேலும் பாதுகாப்பு செயலாளராக பதவியிலிருந்து நீக்கிய பின்னர் கோட்டாபய முதன்முறையாகவும், ஜனாதிபதி பதவியை இழந்த பின்னர் மஹிந்த ராஜபக்ஷ முதன்முறையாகவும் நாளை யாழ்ப்பாணத்திற்கு செல்லவுள்ளனர்.குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, காணாமல் ஆக்கப்பட்ட லலித் - குகன் தொடர்பான ஆள்கொணர்வு மனு மீதான விசாரணைக்காக ஆஜராக மறுத்த கோத்தாபய ராஜபக்ச யாழ்ப்பாணத்திற்கு வருகைதருவது தனது உயிருக்கு அச்சுறுத்தல் என்று நீதிமன்றில் சமர்ப்பனம் செய்திருந்தார். அதே காரணத்தை ஏற்றுக் கொண்டு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் விடுத்த உத்தரவுக்கு மேன் முறையீட்டு நீதிமன்றம் தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments