பலத்தைக் காட்டிய குர்திஷ் மக்கள்; பணிந்தது ஜெர்மன், பிரான்ஸ்!

குர்திஷ் மக்களுக்கு எதிராக துருக்கி மேற்கொண்டுள்ள தாக்குதல் நடவடிக்கைகளை நிறுத்தி அங்கு அமைதியை நிலைநாட்டும் பொருட்டு ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் நாடுகள்  துருக்கிக்கு ஆயுத ஏற்றுமதிகளை நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.

முன்னதாக இதற்க்கான அறிவிப்பினை ஜெர்மனின் வெளியுறவுத்துறை  அமைச்சர்  Heiko Maam நேற்று சனிக்கிழமை கூறியுள்ளார்.
 
ஜேர்மனி 243,000,000 யூரோக்கள் ($268,000,000) மதிப்புள்ள ஆயுதங்களை 2018 ல் துருக்கிக்கு ஏற்றுமதி செய்தது. இது ஜேர்மனிய ஆயுத ஏற்றுமதியில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை பிரான்சும் "இந்த தாக்குதல் முடிவுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பில், இந்த தாக்குதலில் பயன்படுத்தக்கூடிய துருக்கி ஆயுதங்களை ஏற்றுமதி செய்யும் அனைத்து திட்டங்களையும் நிறுத்தி வைக்க பிரான்ஸ் முடிவு செய்துள்ளது. இந்த முடிவு உடனடி விளைவை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள்  திங்களன்று லுக்சம்பேர்க் கூட்டத்தில் தங்கள் நிலைப்படு குறித்து கலந்துரையாடவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.


முன்னதாக கடந்த வாரங்களில் ஐரோப்பிய நாடுகளில் பல்வேறு முக்கிய நகரங்களில் குர்திஷ் இன மக்கள் மீது துருக்கியினால் தொடுக்கப்பட்டுள்ள தாக்குதல்களுக்கு எதிராக குர்திஷ் மக்களும் மனிதவுரிமை ஆர்வலர்களும் போராட்டங்களில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments