கோத்தா –டக்ளஸ் இரகசிய பேச்சு:மீண்டும் ஆரம்பம்?


நேற்றைய யாழ்.விஜயத்தின் போது கோத்தாவும் டக்ளஸ் தரப்பும் தனியே சந்தித்து நடத்திக்கொண்ட சந்திப்பு ஊடகப்பரப்பில் பரபரப்பினை தோற்றுவித்துள்ளது. 

தனது யாழ்.விஜயத்தின் போது கோத்தா முதலில் நல்லை ஆதீனத்தை சந்தித்து பேச்சு நடத்த சென்றிருந்தார்.அப்போது அங்கு வாசலில் நின்று வரவேற்றிருந்த டக்ளஸை தனது வாகனத்தில் ஏற்றிக்கொண்டார்.

பொதுக்கூட்ட மைதானத்திலும் கோத்தாவின் உரையின் பின்னர் டக்ளஸ் காணாமல் போயிருந்தார்.

இந்நிலையில் உலங்கு வானூர்தி மூலம் வெளியேறும் வரையிலும் டக்ளஸை கொண்டு திரிந்த கோத்தா முக்கிய விடயங்கள் தொடர்பில் டக்ளஸிற்கு அறிவுறுத்தியதாக தெரிகின்றது.

இந்நிலையில் கோத்தாவின் உத்தரவின் பேரில் நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்,யுவதிகளை கடத்தி காணாமல் ஆக்கிய டக்ளஸிற்கு மீண்டும் கோத்தா கடமைகளை கொடுத்திருப்பதாக சொல்லப்படுகின்றது.

இதனால் மீண்டும் காணாமல் போதல்கள் மற்றும் கொலைகள் அரங்கேறலாமென்ற அச்சம் ஊடகங்களிடையே எழுந்துள்ளது.  

No comments