டக்ளஸ் கேக் தீத்தினார்?தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் கோட்டபாய ராஜபக்ஷவுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளார்.
வியாழேந்திரன் உள்ளிட்ட 14 கட்சிகள் இணைந்து இன்று (வெள்ளிக்கிழமை) கொழும்பு பொதுஜன பெரமுன கட்சியின் தலைமை காரியாலயத்தில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

இந்த சந்திப்பில் கிழக்கு மாகாணம் சார்பாக முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா), தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன், மட்டக்களப்பு மாவட்ட பொதுஜன பெரமுன கட்சியின் அமைப்பாளர் சந்திரகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது, நடைபெறப்போகும் ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்சவை ஆதரிப்பதற்கு 14 கட்சிகளும் தீர்மானித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பொதுஜன பெரமுன கட்சியின் அமைப்பாளர் பா.சந்திரகுமார் தெரிவித்தார்.


அத்துடன் அவருக்கு ஆதரவாக டக்ளஸ் வடக்கில் பிரச்சாரங்களை முன்னெடுக்கவுள்ளார்.

No comments