யாழில் புதிதாக ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள்?

எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள அரச தலைவர் தேர்தலில் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் 5 லட்சத்து 29 ஆயிரத்து 232 பேர் வாக்களித்திருந்தனர். இவர்களுக்காக 626 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த ஆண்டு இடம்பெறும் தேர்தலில் 5 லட்சத்து  35 ஆயிரத்து 482 பேர், அரச தலைவர் தேர்தலில் தமது வாக்குகளை யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் புதிதாக செலுத்தவுள்ளனர்.
யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் யாழ்ப்பாண நிர்வாக மாவட்டத்தில் உள்ளடங்கும் ஊர்காவற்துறை தேர்தல் தொகுதியில் 23 ஆயிரத்து 351 பேர் வாக்களிப்பதற்காக 47 வாக்களிப்பு நிலையங்களும்,
வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதியில் 49 ஆயிரத்து 956 பேர் வாக்களிப்பதற்காக 57 வாக்களிப்பு நிலையங்களும்,
காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் 64ஆயிரத்து 828 பேர் வாக்களிப்பதற்காக 58 வாக்களிப்பு நிலையங்களும்,
மானிப்பாய் தேர்தல் தொகுதியில் 57 ஆயிரத்து 883 பேர் வாக்களிப்பதற்காக 62 வாக்களிப்பு நிலையங்களும்,
கோப்பாய் தேர்தல் தொகுதியில் 59 ஆயிரத்து 811 பேர் வாக்களிப்பதற்காக 62 வாக்களிப்பு நிலையங்களும்,
உடுப்பிட்டி தேர்தல் தொகுதியில் 40 ஆயிரத்து 979 பேர் வாக்களிப்பதற்காக 53 வாக்களிப்பு நிலையங்களும்,
பருத்தித்துறை தேர்தல் தொகுதியில் 38 ஆயிரத்து 521 பேர் வாக்களிப்பதற்காக 46 வாக்களிப்பு நிலையங்களும்,
சாவகச்சேரி தேர்தல் தொகுதியில் 55 ஆயிரத்த 283 பேர் வாக்களிப்பதற்காக 52 வாக்களிப்பு நிலையங்களும்,
நல்லூர் தேர்தல் தொகுதியில் 49 ஆயிரத்து 715 பேர் வாக்களிப்பதற்காக 52 வாக்களிப்பு நிலையங்களும்,
யாழ்ப்பாணத் தேர்தல் தொகுதியில் 34 ஆயிரத்து 849 பேர் வக்களிப்பதற்காக 43 வாக்களிப்பு நிலையங்களும்,
கிளிநொச்சித் தேர்தல் தொகுதியில்   89 ஆயிரத்து 538 பேர் வாக்களிப்பதற்காக 100 வாக்களிப்பு நிலையங்களும் அமைக்கப்படவுள்ளன.

No comments