பின்வாங்குகின்றார் மகேஸ் சேனநாயக்க?


எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு வேட்புமனுத் தாக்கல் செய்திருக்கும் தேசிய மக்கள் கட்சியின் வேட்பாளர் மஹேஷ் சேனாநாயக்க மற்றும் தேசிய அபிவிருத்தி முன்னணியின் வேட்பாளர் ரொஹான் பல்லேவத்த ஆகியோர் ஜனதிபதித் தேர்தல் போட்டியிலிருந்து இராஜினாமா செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திசாநாயக்கவுடன் ஏற்படுத்தப்பட்டிருக்கும் உடன்பாட்டுக்கு அமையவே குறித்த வேட்பாளர்கள் இருவரும் இராஜினாமா செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த மூன்று வேட்பாளர்களும் மாற்று அபேட்சகர்களாக ஜனதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற நிலையில் பிரதான அபேட்சகர்கள் இருவரை தவிர்ந்த வாக்கு பலம் கொண்ட அபேட்சகர்களாக குறித்த மூவருமே இருக்கின்றனர்.
எதிர்வரும் தினங்களில் மூன்று வேட்பாளர்களுக்குமிடையில் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதுடன் பேச்சுவார்த்தை வெற்றி பெற்றால் மஹேஷ் சேனாநாயக்க மற்றும் ரொஹான் பல்லேவத்த ஆகியோர் வேட்பாளர் பதவியை இராஜினாமா செய்து அநுர குமார திசாநாயக்கவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதித் தேர்தலுக்கு களமிறங்குவதற்கு முன்னர் அநுரவின் தேசிய மக்கள் சக்தி மற்றும் மஹேஷ் சேனாநாயக்கவின் தேசிய மக்கள் இயக்கம் என்பன ஒன்றிணைந்து போட்டியிடுவதற்கு பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றிருந்தாலும் இரு தரப்பினராலும் உடன்பாட்டுக்கு வர முடியாமல் போனது.
அதன்படி தற்போது குறித்த மூன்று வேட்பாளர்களும் ஒன்றுபடும் பட்சத்தில் அது பிரதான அபேட்சகர்கள் இருவரினதும் வாக்குப் பலத்தில் பாரிய தாக்கத்தை செலுத்தும் என தெரிவிக்கப்படுகிறது.

No comments