ஆளுக்கு இரண்டு மில்லியன்:அள்ளிவீசும் கோத்தா?


நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் கோத்தா தரப்பு ஆட்களை இழுக்க அள்ளிக்கொட்டிருக்கின்ற நிலையில் சுயேட்சைகளை வலைவீசி இழுத்துவருகின்றது.

சாதாரண உள்ளுராட்சி சபையொன்றின் உறுப்பினராயின் 2 முதல் 3மில்லியன் வரையில் ஒதுக்கீடு பணமாக வழங்கப்பட்டு தம்முடன் இணைய பேரம் பேசப்படுவதாக தெரியவந்துள்ளது.

முன்னாள் வடக்கு ஆளுநர் கூரேயின் மேற்பார்வையில் இத்தகைய இணைப்பு முன்னெடுக்கப்படுவதாக தெரியவருகின்றது.

அவ்வாறு பேரம் பேசப்படுபவர்கள் பின்னர் தமது ஆதரவாளர்களுடனான பிரச்சார கூட்டமொன்றிற்கு ஏற்பாடு செய்யவேண்டுமெனவும் பின்னர இணைப்பு நாடகம் அரங்கேற்றப்பட்டு பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகின்றது.
இதனிடையே  போட்டியிடும் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவிற்கு யாழில் இயங்கும் சமூக மேம்பாட்டு இணையம் ஆதரவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய அந்த இணையத்தின் தலைவர் மற்றும் வலி. மேற்குப் பிரதேச சபையில் சுயேட்சைக் குழு உறுப்பினர்களாக இருக்கின்ற மேற்படி இணையத்தின் இரண்டு உறுப்பினர்களும் இன்று (புதன்கிழமை) பொதுஜன பெரமுனவில் இணைந்து கொண்டுள்ளனர்.

இவர்கள், யாழ். கே.கே.எஸ். வீதியின் சிவலிங்கப்புளியடிச் சந்தியிலுள்ள கட்சியின் அலுவலகத்தில் வைத்து கட்சியின் வட. மாகாண பிரசார இணைப்பாளர் ரெஜினோல்ட் குரேயிடமிருந்து அங்கத்துவத்தை பெற்றுக் கொண்டனர்.

No comments