தகவல் வழங்க மறுக்கும் இராணுவம்?


இறுதி யுத்தத்தின்போது இராணுவத்தினரிடம்  சரணடைந்த தமிழீழ விடுதலை  புலிகள் அமைப்பின் உறுப்பினர்களது விபரங்களை பகிரங்கப்படுத்த படைத்தலைமை மறுத்துவருகின்றது.

இது தொடர்பில்  இராணுவத்தால் வழங்கப்பட்ட திரிபுபடுத்தப்பட்ட தகவல்களுக்கு எதிராக, தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவில் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க தகவல் அறிந்துகொள்ளும் உரிமைகள் தொடர்பான சட்டத்தின் ஒழுங்குவிதி இல. 07 படி, தமிழ்; ஊடகவியலாளர் ஒருவரால், இறுதி யுத்தத்தில் சரணடைந்த தமிழீழ விடுதலை புலிகள் தொடர்பான தகவல்கள் இராணுவத்திடம் கோரப்பட்டிருந்தது.

இறுதி யுத்தத்தின்போது புலிகள் இராணுவத்திடம் சரணடையவில்லை எனவும் அவர்கள் அரசாங்கத்திடமே சரணடைந்தார்கள் எனவும் தெரிவித்திருந்த இராணுவம், புனர்வாழ்வு ஆணையாளர் பணியகத்தில் இது தொடர்பானத் தகவலைப் பெற்றுக்கொள்ள முடியுமென பதிலளித்திருந்தது.
இராணுவத்தால் வழங்கப்பட்டிருந்த பதில் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை என்பதால், இது தொடர்பில் தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவில் இன்று வியாழக்கிழமை மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே சரணடைந்தவர்கள் தொடர்பில் முல்லைதீவு நீதிமன்றில் விபரங்கள் கோரப்பட்ட போதும் அதனை படைத்தரப்பு வழங்க மறுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது

No comments