விபத்தில் ஒருவர் பலி!

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து நேற்று (06) இரவு இடம்பெற்றுள்ளது.

தனியார் பேருந்தொன்றுடன் சைக்கில் ஒன்று நேருக்கு நேர் மோதியமையினால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதில் நிந்தவூரைச் சேர்ந்த 35 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் நிந்தவூர் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் குறித்த பேருந்தின் சாரதி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

No comments