விபத்தில் இளம் தம்பதியினர் பலி!

குருணாகல் - நீர்கொழும்பு பிரதான வீதியின் புளுபிட்டிய பகுதியில் காரொன்றும் கெப் வாகனம் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் தம்பதியினர் உயிரழந்துள்ளனர்.

விபத்துக்குள்ளன காரில் பயணித்த மடவளை பகுதியைச் சேர்ந்த 25 வயதான கணவரும், 30 வயதான மனைவியுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

விபத்து தொடர்பில் கெப் வாகனத்தின் சாரதியை கைதுசெய்துள்ள பொலிஸார், இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments