இஸ்லாமிய அரசு பயங்கரவாத தலைவன் கொல்லப்பட்டார்?

அமெரிக்க இராணுவம் நேற்று (26) வட மேல் சிரியாவில் மேற்கொண்ட தாக்குதலின் போது இஸ்லாமிய அரசுப் பயங்கரவாதிகளின் தலைவன் அபு பகர் அல் பக்தாதி கொல்லப்பட்டான் என்று நம்பப்படுகிறது.

இந்த தகவலை சி என் என் ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ளது.

திடீர் தாக்குதலின் போது அபு தற்கொலை செயது கொண்டதாக நம்பப்படுகிறது. மரபணு சோதனையின் பின்னர் கொல்லப்பட்டது உறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

பல தடவைகள் கொல்லப்பட்டதாக நம்பப்பட்ட அபு இலங்கை மீது மேற்கொண்ட உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்களின் பின்னர் காணொளி மூலம் வெளிப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments