முன்னணியே சரி:சிவாஜி பாராட்டு!


ஐந்து தமிழ்க்கட்சிகளின் உடன்படிக்கையில் இடைக்கால அறிக்கையை நிராகரிப்பதாக குறிப்பிடுவதில் என்ன பிரச்சனையுள்ளது? ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ், விக்னேஸ்வரன் தரப்பு அதை நிராகரிப்பதாக ஏற்கனவே குறிப்பிட்டு விட்டார்கள்தானே என கேள்வியெழுப்பியுள்ளார் ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம்.

இன்று (15) யாழில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

தமிழ் தேசிய கட்சிகளிற்கிடையில் நடத்திய பல சுற்று பேச்சின் பின்னர், ஐந்து கட்சிகள் கையெழுத்திட்டுள்ளன. தமிழ் தேசிய மக்கள் முன்னணி அதில் கையெழுத்திடவில்லை. தமிழ் தெசிய மக்கள் முன்னணி கூறிய கருத்தில், வெளியேறுமாறு நிர்ப்பந்தித்ததாக கூறியுள்ளார்கள். இடைக்கால அறிக்கையை நிராகரிப்பதாக குறிப்பிடும்படி மக்கள் முன்னணி கேட்டது. அதை மற்றவர்கள் நிராகரித்தார்கள். முன்னணி நிராகரிக்கிறது என்றாவது இணையுங்கள் என்று கடைசியாக கேட்டிருக்கிறார்கள். அதற்கும் மற்றவர்கள் மறுத்து விட்டார்கள். அதை இணைத்திருக்கலாம். அதில் மறுப்பதற்கு என்ன இருக்கிறது. ஏன் பயப்பிடுகிறார்கள்.

இடைக்கால அறிக்கையை ரெலோ பகிரங்கமாக நிராகரித்திருக்கிறது. ஈ.பி.ஆர்.எல்.எவ் நிராரித்திருந்தது. நிராகரிப்பதை போன்ற கருத்தை விக்னேஸ்வரன் ஐயாவின் கட்சி தெரிவித்திருந்தது.

இந்த கூட்டிலிருந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியை அவர்கள் வெளியில் விட்டது பொருத்தமான நடவடிக்கையாக எனக்கு தெரியவில்லை. ஒவ்வொரு கட்சிக்கு ஒவ்வொரு கொள்கையிருக்கும்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி தங்களிற்கு சரியென நினைத்ததை துணிந்து சொல்வதை பாராட்டுகிறேன். அதைபோல, எல்லோரும் கொள்கை விடயத்தில் துணிந்து நிற்க வேண்டும் என்றார்.

No comments