துப்பாக்கியுடன் அழைத்தார் தமிழரசு தவிசாளர்?


மக்களால் தெரிவு செய்யப்பட்ட உள்ளுராட்சி சபை பிரதிநிதிகளை அச்சுறுத்த இலங்கை காவல்துறையினை வலி.வடக்கு பிரதேச சபை தவிசாளர் சுகிர்தன் தருவித்தமை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.

சபைக்கூட்டத்தில் ஏற்பட்ட குழப்பத்தையடுத்து , தவிசாளார் தெல்லிப்பழை பொலிஸாரை உதவிக்கு அழைத்திருந்தார்.

உதவிக்கு வந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் தனது பிஸ்டலை உறுப்பினர்களை நோக்கி காட்டி “சுட்டுத்தள்ளிவிடுவேன்” என மிரட்டியிருந்ததுடன்  அவர்களை அச்சுறுத்தியுமிருந்தார்.

காங்கேசன்துறை கல்குவாரி காணிகளில் குப்பை கொட்ட தன்னிச்சையான அனுமதித்தமை, 5ஜி கோபுரத்திற்கு சபை அனுமதி இல்லாமல் தவிசாளர் தன்னிச்சையாக அனுமதி கொடுத்தமை தொடர்பில் கடந்த கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்; தொடர்பில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியதால் ஏற்பட்ட குழப்பத்தையடுத்தே பொலிஸாரினை தருவித்து மிரட்டியதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.

முன்னதாக கூட்டத்தின் போது ஈபிடிபி சார்பு உறுப்பினர் ஒருவர் தன்னை தவிசாளர் தாக்கியதுடன் தனது கைத்தொலைபேசியை சேதமாக்கியதாக காவல்துறையில் புகாரிட்டுள்ளார்.

சுகிர்தன் தமிழரசுக்கட்சி தலைவர் மாவை சேனாதிராசாவின் வலது கையாக செயற்படுபவரெனவும் சொல்லப்படுகின்றது.

No comments