மாவை மகனிற்காகவே பலாலிக்கு விசேடபாதை?


யாழ்ப்பாண விமான நிலையத்திற்கான போக்குவரத்து பாதை மக்கள் காணிகள் மற்றும் குடியிருப்புக்களின் மத்தியினில் அமைக்கப்பட்டமைக்கு தமிழரசுக்கட்சி தலைவர் மாவையின் மகன் அமுதனே காரணமென புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.குறித்த விமான நிலையத்தை இலக்கு வைத்து புதிதாக கட்டப்படவுள்ள நட்சத்திர உணவகத்திற்கு பயணிகள் வருகை தர ஏதுவாக குறித்த பாதையினை வகுத்திருப்பதாக தெரியவருகின்றது.

முன்னதாக இலங்கை விமானப்படை காணிகளை விட்டுக்கொடுக்காமையாலேயே மக்களது காணிகளை ஆக்கிரமித்து பாதை அமைக்கப்படுவதாக சொல்லப்பட்டது.ஆனாலும் மாவையின் தனிப்பட்ட செயலாளரும் வலி.வடக்கு பிரதேசசபை தலைவருமான சுகிர்தன் தொடர்ச்சியாக திருட்டு மௌனத்தை பேணியே வந்திருந்தார்.இந்நிலையில் விடுதிக்கு பயணிகளை வரவழைக்கவே அதனை கண்டுகொள்ளாமல் இருந்தமை அம்பலமாகியுள்ளது.

இதனிடையே தமிழுக்கு முன்னுரிமையென சொல்லிக்கொண்டு திறக்கப்பட்ட யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் கண்டிய நடனத்துடன் பெயர்பலகைகள் திரைநீக்கம் செய்யப்பட்டுள்ளது.மைத்திரி,ரணில் தரப்புடன் கூட்டமைப்பினரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments