தமிழ் தேச ஜனாதிபதி இரா.சம்பந்தன்?


எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களது பொதுவேட்பாளராக களமிறங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தனிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.நேற்றைய தினம் நடைபெற்ற சிவில் தரப்புக்களது சந்திப்பிலேயே இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி , தமிழ் மக்கள் கூட்டணி ஆகிய கட்சிகளையும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுவான நிலைப்பாடு எடுக்கும் நோக்கிலான பேச்சுக்கள் நடந்துவருகின்றது. முன்னதாக திருகோணமலை மறைமாவட்ட ஆயர் நோயல் இம்மானுவேல் தலமையில் நேற்றைய தினம் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்து கலந்துரையாடினார்.

யாழ்ப்பாணம் குரு முதல்வர் சிம்மியா மிசன் சுவாமிகள்,தென்கயிலை சுவாமிகள் உள்ளிட்டோரும் சந்திப்பில் பங்கெடுத்திருந்தனர்.
இதன் போது முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் முன்னாள் முதல்வர் ஆகியோருடன் உரையாடி அவர்களின் சம்மதத்தினை பெற முயற்சிகள் நடக்கின்றன.
இதன் ஒரு கட்டமாக முன்னாள் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனை இன்று சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments