கோத்தாவுடன் இணைந்த சுதந்திர கட்சியை மீட்கும் அணி அதிரடி உருவாக்கம்


ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை மீட்டெடுக்கும் அணியொன்று இன்று (25) உருவாக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் வழிகாட்டலின் கீழ் இந்த அணி செயற்படவுள்ளது.

கிராண்ட் ஒரியண்ட் ஹோட்டலில் இதன் மாநாடு நடந்தது. குமார வெல்கம எம்பி மற்றும் சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களான அதாவுத செனவிரத்ன, கடுவெல முன்னாள் மேயர் புத்ததாச உட்பட்ட பலரும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், மாவட்ட அமைப்பாளர்களும் இதில் கலந்து கொண்டனர்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுன வெற்றி பெற்றால் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அழிவடையும் நிலைமை ஏற்படும் என்பதால் அதனை தடுத்து நிறுத்தும் அனைத்து வேலைகளையும் செய்யவேண்டுமென இன்றைய கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

நவம்பர் ஐந்தாம் திகதி பொதுக் கூட்டமொன்றை சுகததாஸ உள்ளரங்கில் நடத்துவதற்கும் அன்றைய தினம் சுதந்திரக் கட்சியின் அதிருப்தியாளர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இன்றைய கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது

No comments