பிச்சைக்காசிற்கும் ஆயிரம் நிபந்தனைகள்!


காணாமல் போனோருக்கான குடும்பங்களிற்காக 6 ஆயிரம் ரூபா கொடுப்பனவைப்பெற்றுக்கொடுக்க கூட்டமைப்பு உச்சகட்ட முயற்சிகளை ஆரம்பித்துள்ளது.

இதனை  பெறுவதற்காக இதுவரை வெறும் 652 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ள நிலையில் அவர்களை காணாமல் போனமைக்கான சான்றிதழை பெற்றுக்கொள்ள அரசு வற்புறுத்திவருகின்றது.

இதனிடையே விண்ணப்பித்தவர்களிற்கான கொடுப்பனவுகளை நவம்பர் மாதம் 2ம் திகதி வழங்குவதற்கான ஏற்பாடுகள் அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அரச கரும மொழிகள் மற்றும் தேசிய நல்லிணக்க அமைச்சின் மேலதிக செயலாளர் இ.இரவீந்திரன் என்பவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசு 2019ம் ஆண்டின் பாதீட்டில் இவ்விடயத்திற்கு நிதி ஒதுக்கியுள்ளது.  குறித்த நிதியினைப் பெறுவதற்கு காணாமல் போனவர் என்ற சான்றிதழைச் சமர்ப்பிக்கவேண்டிய தேவை உள்ளது. 

குறித்த கொடுப்பனவை பெற விரும்புபவர்கள் சான்றிதழைப் பெற விரும்பும் பட்சத்தில் பிரதேச , மாவட்ட செயலகங்களை நாடி தமக்கான சான்றிதழைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இதேநேரம் ஏற்கனவே சான்றிதழ்கரைப் பெற்றவர்களும் 2019ம் ஆண்டில் எந்த மாதகாலத்துடன் சான்றிதழ் வலுவிழக்கின்றதோ அதுவரையான காலத்திற்குரிய கொடுப்பனவினையே பெறமுடியும். முழுமையான கொடுப்பனவை பெறவேண்டுமானால் அவர்களும் சான்றிதழைப் பெற்றே ஆகவேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

No comments