சென்னைக்கும் விமானம் இருக்கிறதாம்?


சென்னையில் இருந்து பலாலி விமான நிலையத்துக்கு  வாரத்துக்கு ஏழு விமான சேவைகளை நடத்துவதற்கு, எயர் இந்தியாவின் துணை நிறுவனமான, அலையன்ஸ் எயர் நிறுவனத்துக்கு, இந்திய அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.

பலாலி விமான நிலையம் புனரமைப்புச் செய்யப்பட்டு, யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையமாக பெயரிடப்பட்டுள்ளது.இதன் திறப்பு விழா வரும் 17ஆம் நாள் நடக்கவுள்ளது.

இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமர் இணைந்து இதனை திறந்துவைக்கவுள்ளனர்.

இந்த நிலையிலேயே, சென்னை விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு விமான நிலையங்களுக்கு வாரத்தில் 7 விமான சேவைகளை நடத்துவதற்கு, இந்திய அரசாங்கம்  அலையன்ஸ் எயர் நிறுவனத்துக்கு அனுமதி அளித்துள்ளது.

அலையன்ஸ் எயர்  நிறுவனம் வெளிநாட்டுக்கான (சிறிலங்கா) சேவைகளை நடத்துவதற்கு, இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு, அனுமதி அளித்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னதாக சென்னைக்கான விமான சேவைகள் இடம்பெறாதென செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments