சென்னை விமானசேவை இல்லவேயில்லையாம்?


கட்டுநாயக்காவிலிருந்து சென்னைக்கான விமானசேவையே கூடிய வருவமானத்தை அரசுக்கு தருவதாலேயே அதனை பலாலியிலிருந்து ஆரம்பிக்க பின்னடிப்பதாக சொல்லப்படுகின்றது.

குறித்த யாழ்ப்பாணம் விமான சேவையினை ஆரம்பிப்பதில் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலைய அதிகாரிகளே தாமதம் ஏற்படுத்துவதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது. அதாவது தற்போது வாரம் ஒன்றிற்கு கட்டுநாயக்காவில் இருந்து சென்னைக்கு 50 விமான சேவை இடம்மெறுவதன் மூலமே குறித்த விமான நிலையத்திற்கு அதிக வருமானம் கிடைப்பதனால் யாழ்ப்பாணம் விமான சேவை ஆரம்பித்தால் இச் சேவை குறைவடையும் என அதிகாரிகள் கருதுகின்றனர்.

இதனிடையே யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இந்தியாவிற்கான விமான சேவையில் திருச்சி கொச்சி விமான சேவைகள் அன்றி முதலாவதாக சென்னைக்கான விமான சேவையே இடம்பெறும் எனத் தற்போது தெரியவருகின்றது.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையமானது படிகள் முடிவுற்று தரச் சான்றிதழ் இதுவரை இந்திய சிவில் விமான கட்டுப்பாட்டு அதிகார சபைக்கு கையளிக்கப்படாதமையினால் இந்தியன் எயார் லைன்ஸ் தனது அதிகார பூர்வ பறப்பு விமான நிலையங்களின் பட்டியலில் யாழ்ப்பாணம் விமான நிலையத்தின் பெயர் இணைக்கப்படவில்லை. குறித்த சான்றிதழ் எதிர் வரும் 10ம் திகதி யாழ்ப்பாணம் விமான நிலையத்தின் முதல் கட்ட பணிகள் பூர்த்தியாகியதன் பின்னர் 17ம் திகதி திறப்புவிழாவிற்கான பரிசோதனைக்காக இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின் அதிகாரிகள் குழு விமான நிலையத்தின் தரத்தினை பரிசோதிக்க வருகை தரவுள்ளனர்.

அவ்வாறு வருகை தரும் குழுவினர் சான்றிதழ் வழங்கப்படும் பட்சத்தில் 17ம் திகதி முதல் தடவையாக பரீட்சார்த்தமாக விமானி மட்டும் பயணிக்கும் விமானம் யாழ்ப்பாணம் விமான நிலையத்தினை வந்தடைந்து விமான நிலையத்தை சுற்றி வட்டமடித்து விமான ஓடு பாதையில் விமானத்தை தரை இறக்க முடியுமா என்பதனை கண்டறிவார். போதிய வசதி உண்டு என விமானி எண்ணும் சந்தர்ப்பத்திலேயே விமானம் தறை இறங்கும் .

அவ்வாறு குறித்த விமானம் தறை இறங்கினால் மட்டுமே அடுத்த கட்டமாக பயணிகளுடனான விமான சேவைக்கு ஒப்புதல் அளிக்கப்படும். அதனால் விமான நிலையம் எதிர் வரும் 17ம் திகதி திறக்கப்பட்டாலும் இம்மாதம் இறுதியிலேயே பயணிகள் பயணிக்கும் நிலமை ஏற்படும். அவ்வாறு பயணிகள் சேவை ஆரம்பிக்கும்போதும் பகல்சேவைகள் மட்டுமே இடம்பெறும். இரவு சேவைகளும் அதிக மழைகாலத்திலும் சேவையில் ஈடுபடும் வசதிகள் தற்போது விமான ஓடுபாதையில் கிடையாது. அதாவது இரவு சேவைக்கான விசேட மின்ஒளி சேவை இதுவரை பொருத்தப்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.

No comments