35 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர்

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களான கோத்தாபய ராஜபக்ச, சஜித் பிரேமதாச, அநுரகுமார திசாநாயக்க உள்ளிட்டோர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

41 பேர் கட்டுப்பணம் செலுத்தினாலும் இதுவரை 35 பேர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 3 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யப் போவதில்லையென அறிவித்துள்ளனர்.

இரண்டு பேர் மீது ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தலைவர் தெரிவித்தார்.

சமல் ராஜபக்ச, மஹிபால ஹேரத் ஆகியோர் கட்டுப்பணம் செலுத்தினாலும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

No comments