சங்கத்தை குழம்பும் வேலையில் தமிழ்த்தேசியக் கட்சி! காணாமலாக்கப்பட்டோர் உறவினர் கவலை;

வடகிழக்கு மாகாணங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினா்கள் தமது உறவுகளுக்காக போராடிக் கொண்டிருக்கும் நிலையில் தமிழ்தேசியம் பேசும் அரசியல் கட்சியொன்று காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவுகளுடைய போராட்டத்தை மழுங்கடிக்கும் வகையில் செயற்பட்டு வருவதுடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் புதிது புதிதாக தலைவிகளை உருவாக்கி உண்மையில் உறவுகளை பறிகொடுத்துள்ளவா்களை ஏளனம் செய்வதும், பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்துவதுமாக செயற்படுவதுடன், தங்கள் கட்சியின் நலன்களுக்காக காணாமல் ஆக்கப்பட்டவா்களை பயன்படுத்துகின்றன.

மேற்கண்டவாறு வடகிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்களது சங்கம் குற்றஞ்சாட்டியிருக்கின்றது.

மேற்படி சங்கத்தின் செயலாளா் லீலாவதி நேற்று யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளா் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தொிவிக்கும்போதே அவா் மேற்கண்டவாறு கூறியுள்ளாா். இதன்போது மேலும் அவா் கூறுகையில்,

யாழ்.மாவட்டத்திலும், மட்டக்களப்பு மாவட்டத்திலும் காணாமல் ஆக்கப்பட்டவா் களின் சங்க தலைவி என கூறி சம்பளம் கொடுத்து எந்த விதத்திலும் பாதிக்கப்படாதவா்களை வைத்து உண்மையில் பாதிக்கப்பட்டு கடந்த 10 வருடங்களாக உறவுகளை தேடிக் கொண்டிருக்கும் எங்களின் போராட்டங்களை மழுங்கடிப்பதற்கு அந்த கட்சி முயற்சிக்கின்றது.

இதற்கும் மேலதிகமாக வவுனியா மாவட்டத்தில் எந்த விதத்திலும் பாதிக்கப்படாத ஒருவா் காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் சிலரை வைத்துக் கொண்டு முழுநேர தொழிலாக இதனை செய்து கொண்டிருக்கின்றாா்.

இதனோடு மட்டும் நின்றுவிடாமல் குறித்த கட்சியினால் உருவாக்கப்பட்டிருக்கும் சங்கங்களின் போலி தலைவிகள் போராட்டங்களை நடாத்தி ஊடக சந்திப்புக்களில் அதே கட்சியினால் எழுதிக் கொடுக்கப்பட்ட விடயங்களை வாசித்து எங்கள் மீது வசைபாடிக் கொண்டிருக்கின்றாா்கள்.

தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று எப்படியாவது அதிகாரத்திற்கு வரவேண்டும். என துடிக்கும் இவா்கள் தங்களின் அநாகாிகங்களை நிறுத்தவேண்டும். எங்கள் மீதான குற்றச்சாட்டுக்களை அவா்கள் கூறியதுபோல் நிரூபிக்கவேண்டும். நிரூபிக்காவிட்டால். அந்த கட்சியின் பெயரை வெளிப்படையாக கூறி அந்த கட்சி யாா்? என்பதை தமிழ் மக்களுக்கு காட்டுவோம் என கூறியிருக்கின்றனார்.

இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை...

No comments