காந்தி ஜனனதினம்?



வட மாகாணத்தில் மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வுகள் இந்திய தூதரக ஏற்பாட்டில் நடத்தப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று புதன்கிழமை பருத்தித்துறை, யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை, அரியாலை, முல்லைத்தீவு, கிளிநொச்சி, புங்குடுதீவு ஆகிய இடங்களில் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பருத்தித்துறை நகர மத்தியில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் திருவுருவச் சிலைக்கு யாழ் இந்திய பதில் துணைத் தூதுவர் ராமேஸ்வர் பக்தா பருத்தித்துறை நகரசபை தவிசாளர் ஆகியோர் மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

நகரில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் திருவுருவச் சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்தும் நிகழவில் வடமாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், யாழ் மாநகரசபை முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் பங்கெடுத்திருந்தனர். வல்வெட்டித்துறை வைத்தீஸ்வரன் கோவில் வரை அமைதிக்கான நடைபவனியும் அதனைத் தொடர்ந்து அக்கோவில் கோபுரத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் திருவுருவச் சிலைக்கு மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.

பெருமெடுப்பில் பரவலாக இம்முறை காந்தி பிறந்த தினம் வடக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments