ஒரே மேடையில் மூவேந்தர்கள்

ஜனாதிபதி வேட்பாளர்கள் ஒரே மேடையில் சங்கமிக்கும் மக்கள் மேடை நிகழ்வு இன்று (05) மாலை 3 மணி முதல் 6 மணி வரை சுகததாச விளையாட்டு அரங்கில் இடம்பெறவுள்ளது.

மார்ச் 12 இயக்கம் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.

இதில் ஜனாதிபதி வேட்பாளர்களான சஜித் பிரேமதாச, அநுர குமார திஸாநாயக்க ஆகியோர் கலந்து கொள்வது உறுதியாகியுள்ளது.

கோத்தாபய ராஜபக்சவும் இதில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments