Header Shelvazug

http://shelvazug.com/

பணத்திற்கு அடிமையானோரை நம்பாதீர்:கணேஸ் வேலாயுதம்


நாட்டின் சுவிட்சத்தையும் பொது மக்களின் முன்னேற்றத்தையும் உண்மைக்கு உண்மையாக நேசித்து வீறு கொண்டு செயற்படும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவைத் தவிர வேறு எந்த வேட்பாளரையும் அடையாளப்படுத்த முடியாது. அதற்குரிய பண்பு. நேர்மை, பற்றுறுதி, அர்ப்பணிப்பு, உணர்வு சகல அம்சங்களையும் இயல்பாகவே கொண்டவராக ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச திகழ்கிறார். இத்தகைய நல்லதொரு அரசியல் தலைவரை அடி மட்ட பெரும்பான்மையின ஏழை எளிய மக்கள் அடையாளம் கண்டுள்ளார்கள். எனவே இந்த சந்தர்ப்பத்தில் சிறுபான்மையின மக்கள் போலியான வாக்குறுதிகளுக்கும் பணத்துக்கும் மதிமயங்கி விடாமல் தமிழ் மக்கள் நலனை முன்னிறுத்தி மக்களை நேசிக்கும் உண்மையான ஜனாதிபதி வேட்பாளர் யார் என்று சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்று மக்கள் முன்னேற்றக் கூட்டணியின் பொதுச் செயலாளர் நாயகம் கணேஸ்வரன் வேலாயும் தெரிவித்தார்.
ஜனாதிபதி வேட்;பாளர் சஜித் பிரேமதாச அவர்களை ஆதரித்து விசேட கூட்டம் அமைச்சர் ரஞ்ஜித் மத்தும பண்டார இல்லத்தில் முன்னாள் மேல் மாகாண மாகாண சபை உறுப்பினரும், அவிஸ்ஸாவலை ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளருமான சாகல ரத்நாயக தலைமையில் இடம்பெற்றது. அந்நிகழ்வில் கலந்து கொண்ட மக்கள் முன்னேற்றக் கூட்டணியின் பொதுச் செயலாளர் நாயகம் கணேஸ்வரன் வேலாயும் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கையில் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்
பல்லின மக்கள் வாழும் இலங்கைத் தீவில் தமிழ் மக்களின் ஆதரவுடன் ஆட்சி பீடமேறிய தலைவர்கள் பலர் இருக்கின்றார்கள். ஆனாலும் சஜித் பிரேமதாச அவர்களைப் பொறுத்தவரையிலும் அவருடைய அரசியல் தலைமைத்துவப் பண்பு மிகவும் வித்தியாசமானது. இந்த நாட்டில் அடி மட்ட ஏழை எளிய மக்களை மட்டுமல்ல இந்நாட்டில் வாழக் கூடிய சகல மக்களையும் இன வேறுபாடுகளின்றி நிம்மதியாக வாழக் கூடிய சூழலை உருவாக்கும் ஆளுமை அவரிடம் காணப்படுகின்றது.
உண்மையிலேயே மாதாந்தம் சம்பளம் அறவிடாமல் அமைச்சினுடைய சுகபோகங்களையெல்லாம் அனுபவிக்காமல் தனக்கென்றதொரு ஒரு காவலாளியை வைத்துக் கொண்டு செயற்படுபவர். அரசினால் வழங்கப்படும் சம்பளம் மற்றும் சலுகைகளைப் பெற்றுக் கொள்வதில்லை. அவர் அந்தப் பணங்களை அதே அமைச்சிலுள்ள சமூக நலன் புரி அமைப்புக்கு திருப்பிச் செலுத்தி வரும் அமைச்சராவார். ஆகாய விமானப் பயணச் செலவுகளையும் தரை வழியாகப் போக்குவரத்து செலவீனங்கள் எல்லாம் குறைத்து நாட்டு மக்களுடைய பணத்தை வீண் விரயம் செய்யாமல் பல இலட்சம் ரூபாய் மிச்சம் பிடித்து ஒரு முன்மாதரியான புதிய அரசியல் கலாசாரத்தை தோற்றிவித்து காட்டிய அரசியல்வாதியாக அவர் களமிறங்கியுள்ளார்.
இலங்கையிலே இந்த யுகத்தில் இப்படிப்பட்ட அரசியல்வாதி ஒருவரை சல்லடை போட்டுத் தேடினாலும் கண்டு பிடிக்க முடியாது.
ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கின்ற தமிழ் மக்கள் கடந்த கால வரலாற்றை மீட்டிப் பார்த்து நம்பிக்கைக்குரியவர் யார்? கடந்த காலத்தில் நடந்தவை எவை? எல்லாம் சீர்தூக்கி ஆராய்ந்து பார்த்து தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும். கடந்த கால வரலாற்றை நாம் மறக்க முடியாது. அந்த வலி நெஞ்சில் இருந்து இன்னும் போகவில்லை. எனவே வெறுமனே அற்ப சொற்ப பணத்துக்கு சோரம் போய் எமது தமிழ் சமூகத்துக் எதிரான வேட்பாளருக்கு ஆதரவளிப்பராயின் ஒட்டுமொத்த தமிழ் மக்களுடைய எதிர்காலத்தை சீரழித்துக் கொண்டவர்களுடைய பழியை தம் தோல் மேல் சுமந்தவர்களாக நாம் கருதப்படுவோம். எனவே நாடும் நாமும் பயன்பெற வேண்டும் என்ற நோக்கில் தமிழ் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனாசிங்க உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

No comments