பிரான்சில் தமிழியல் இணையவழித் தேர்வில் மேலும் சாதனை!

பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம், தமிழ் இணையக் கல்விக் கழகத்துடன் இணைந்து நடாத்தும் தமிழியல் இளங்கலை மாணிப் பட்டப்படிப்பில் கடந்த ஆனி மாதம் நடைபெற்ற தமிழியல் அரையாண்டுத் தேர்வில் அனைத்து மாணவர்களும் தொண்ணூறுக்கும் அதிகமான புள்ளிகள் பெற்றுச் சாதனை படைத்துள்ளார்கள்.
குகதாசன் கஸ்தூரி, குகதாசன் மாதங்கி, ராஜமோகன் சரண்யா, ஞானம் நிறோமி, சிமியோன் ஆன் சோபி, பிரான்சிஸ் அமலதாஸ், அருளானந்தம் ஜெகதீஸ்வரி, தர்மகுமார் றொஷ்னா டிலோமி, ஆனந்தக்குமார் மயூரிக்கா ஆகிய மாணவர்களே இச்சாதனையை படைத்துள்ளனர்.

ஏற்கனவே இணையவழித் தேர்வில் அதிகூடிய புள்ளிகள் பெற்றிருந்த இவர்கள் தற்போது எழுத்துத் தேர்வுப் புள்ளிகளும் இணைக்கப்பட்ட நிலையிலேயே அதிகூடிய புள்ளிகளைப் பெற்றிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தால் 2011 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பட்டப்படிப்பானது எட்டு ஆண்டுகளாக நடைபெற்று வருவதோடு ஏற்கனவே ஐம்பதிற்கும் மேற்பட்டோர் தமது பட்டப்படிப்பை முடித்து வெளியேறியுள்ளனர் என்பதும் நினைவுகொள்ளத்தக்கது. 

No comments