அர்ஜுன ரணதுங்க மற்றும் அவரது சகோதரருக்கு அழைப்பு

அரச நிறுவனங்களில் இடம்பெற்ற இலஞ்ச ஊழல் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மற்றும் அவரது சகோதரருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஸ்பாட் டெண்டர் முறையைப் பயன்படுத்தி எரிபொருளை வாங்கும்போது ஏற்பட்ட நிதி முறைகேடுகள் குறித்து சாட்சியம் வழங்க இவர்கள் இருவரையும் நாளை (செவ்வாய்க்கிழமை) முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இடம்பெற்றபோது அமைச்சர் ரணதுங்க அந்த நேரத்தில் பெட்ரோலிய வள அபிவிருத்தி அமைச்சராக பணியாற்றி வந்த அதேவேளை அவரது சகோதரர் தம்மிக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவராக செயற்பட்டு வந்தார்.

இவர்கள் இருவருமே ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகி சாட்சியமளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர் என ஜனாதிபதி ஆணைக்குழுவின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறினார்.

No comments