சஜித்தே வேட்பாளர்:முடிவானது?


அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசா என்பது உறுதியாகியுள்ளது.

இதனை நாளை கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் நடைபெறவிருக்கும் சந்திப்பின் போது அறிவிக்கப்படவுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை கட்சியின் உயர்மட்டத் தலைவர்களைச் சந்தித்த ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தாம் விருப்பம் கொண்டுள்ளதாக தெரிவித்திருந்தார் என தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்த நிலையில் சஜித் பிரேமதாசவுடன் தனியாகச் சந்தித்துப் பேசி வேட்பாளர் தொடர்பாக ஒரு முடிவை எடுக்குமாறு ஐதேக தலைவர்கள் வலியுறுத்தியிருந்தனர்.

இதற்கமைய நேற்றுக் காலை 9 மணியளவில் அலரி மாளிகையில் இந்தச் சந்திப்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், முன்னரே அறிவிக்கப்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டியிருந்ததால், இந்தச் சந்திப்பில் கலந்து கொள்ள முடியாதிருப்பதாக சஜித் பிரேமதாச தெரியப்படுத்தியிருந்தார்.

தனது நிகழ்ச்சி நிரலின் படி அவர் யாழிற்கு வருகை தந்துமிருந்தார்.

இதையடுத்து, நாளை வரை இந்தச் சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

ஜனாதிபதி ஆட்சி முறைமையினை இல்லதொழித்தல் மற்றும் கட்சி தலைமையினை கோராதிருந்தல் உள்ளிட்ட சில நிபந்தனைகளுடன் சஜித் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments